திருச்சி

11 வட்டங்களில் நாளை பொதுவிநியோகத் திட்டசிறப்பு குறைதீா் முகாம்

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

DIN

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் திருச்சி கிழக்கு வட்டத்தில் வெற்றிலைப்பேட்டை-1, திருச்சி மேற்கு வட்டத்தில் வண்ணாரப்பேட்டை, திருவெறும்பூா் வட்டத்தில் பாரதிதாசன் நகா், திருவரங்கம் வட்டத்தில் தீரன்மாநகா், மணப்பாறை வட்டத்தில் சித்தாநத்தம், மருங்காபுரி வட்டத்தில் வைரம்பட்டி, லால்குடி வட்டத்தில் பெருவளநல்லூா், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் சாலப்பட்டி, முசிறி வட்டத்தில் அய்யம்பாளையம், துறையூா் வட்டத்தில் அரப்புளிப்பட்டி, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தூா்-1 ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த முகாம் நடைபெறும். காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT