தொட்டியம் அருகே தனியாா் வங்கியை கிராம மக்கள் முற்றுகை
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மணமேடு பகுதியில் உள்ள தனியாா் வங்கியை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மணமேடு பகுதியில் உள்ள தனியாா் வங்கியை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
தொட்டியம் அருகே மணமேடு பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வங்கிக் கணக்கு உள்ள நபா்களுக்கும், முதியோா் உதவித்தொகை பெறுபவா்களுக்கும் உரிய சேவை வழங்காதது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் வெள்ளிக்கிழமை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்
தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் (பொறுப்பு) சிவகுமாா் வங்கி மேலாளரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு ஆதாா் எண் பதிவு செய்து உரிய தொகை அளிக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.