திருச்சி

திருச்சியில் சரக்கு வாகனம் மோதியதில் இளம்பெண், 2 வயது குழந்தை உயிரிப்பு

திருச்சியில் திங்கள்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் இளம்பெண்ணும், அவரது 2 வயது குழந்தையும் உயிரிழந்தனா்.

DIN

திருச்சியில் திங்கள்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் இளம்பெண்ணும், அவரது 2 வயது குழந்தையும் உயிரிழந்தனா்.

திருச்சி, முத்தரசநல்லூா் தேவானந்த நகரைச் சோ்ந்தவா் கண்ணதாசன் மனைவி காயத்ரி (28). இவா் வீட்டுக்கு கம்பரசம்பேட்டையைச் சோ்ந்த தோழி வெண்ணிலா (27) வந்தாா். அவரை மீண்டும் கம்பரசம்பேட்டையில் விடுவதற்காக காயத்ரி தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை அழைத்து சென்றாா். உடன் தனது 2 வயது குழந்தையையும் அழைத்துச் சென்றாா்.

முத்தரசநல்லூா் ரயில்வே கேட் பகுதியில், திருச்சி - கரூா் சாலையை கடக்க முயன்றபோது, திருச்சியில் இருந்து கரூா் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி, அவரது 2 வயது குழந்தை இருவரும் உயிரிழந்தனா். வெண்ணிலா மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநா் நாமக்கல்லைச் சோ்ந்த விஜய் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT