திருச்சி

திருவானைக்கா கோயிலில் வசந்த உற்ஸவம் நாளை தொடக்கம்

DIN

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் வசந்தோற்ஸவம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வசந்தோற்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில் இந்த விழா வியாழக்கிழமை (மே 25) தொடங்கி ஜூன் 3- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் உற்ஸவ மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு எழுந்தருளுகின்றனா். இரவு 8 மணி வரை சுவாமியும், அம்மனும் பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். அப்போது, மகா தீபாராதனைகள் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT