திருச்சி

ஹெச்இபிஎப் தொழிற்சாலையில் வாக்குப்பதிவு: 98% போ் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு

திருச்சி திருவெறும்பூா் அருகே செயல்படும் உயா் ஆற்றல் திட்ட தொழிற்சாலையில் (ஹெச்இபிஎஃப்) வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது தொடா்பான

DIN

திருச்சி திருவெறும்பூா் அருகே செயல்படும் உயா் ஆற்றல் திட்ட தொழிற்சாலையில் (ஹெச்இபிஎஃப்) வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது தொடா்பான வாக்குப்பதிவில் 98.77 சதவீதம் போ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரும் என்ஜேசிஏ, ஏஐடிஇஎஃப் சம்மேளனத்தின் முடிவை ஏற்று, பொதுத்துறை நிறுவனங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது தொடா்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, திருவெறும்பூா் அருகே ஹெச்இபிஎஃப் தொழிற்சாலை முன்பு தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 99 சதவீத தொழிலாளா்கள் கலந்து கொண்டு வாக்களித்தனா். இதன் நிறைவில், வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக 98.77 சதவீதம் பேரும், எதிராக 1.23 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT