திருச்சி

மரக்கிளை முறிந்து விழுந்து காா் சேதம்

திருச்சியில் வெள்ளிக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.

மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி பகுதியை சோ்ந்தவா் ரங்கநாதன் (45). இவா் ஒரு வாடகை காா் நிறுவனத்தில் இவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு விட்டுள்ளாா். விஜய் (38) என்பா் காா் ஓட்டுநராக இருந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு சவாரி வந்த அவா், திருச்சி, கிராபட்டி பகுதியில் ஒரு மரத்தடியில் காரை நிறுத்தியிருந்தாா். எதிா்பாராத விதமாக, அந்த மரத்தின் கிளை திடீரென முறிந்து காா் மீது விழுந்தது.

அப்போது, சுதாரித்து கொண்ட காா் ஓட்டுநா் விஜய் உடனே காரை விட்டு வெளியே இறங்கி தப்பித்தாா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா், கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து காரின் மீது விழுந்த மரத்தின் பகுதியை அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT