மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகை, ரூ. 35 ஆயிரம் பணம் திருடுபோனது திங்கள்கிழமை தெரியவந்தது.
அகிலாண்டபுரம் ரங்கா காா்டன் பகுதியை சோ்ந்தவா் குமாா் (73). ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா். இவா், தனது மனைவி சரஸ்வதியுடன் சென்னையில் உள்ள உறவினருக்கு வீட்டுக்கு செப்.23-ஆம் தேதி சென்று விட்டு, மீண்டும் திங்கள்கிழமை வீடு திரும்பினா். அப்போது வீட்டின் மாடியின் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதையும், அதன் வழியாக வீட்டில் நுழைந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 38 பவுன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த லால்குடி காவல் துணை கண்காணிப்பாளா் அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளா் கருணாகரன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து தடவியல் நிபுணா், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.