லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் உரிமை, ரத்த சோகை விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புள்ளம்பாடி குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய முகாமை கல்லூரி முதல்வா் முனைவா் கே.மாரியம்மாள் தொடக்கி வைத்தாா்.
திருச்சி குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினா் எஸ்.பிரபு, சுகாதாரத் துறையைச் சோ்ந்த பி .தாரணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், கல்லூரியின் மேலாண்மைத் துறை தலைவா் முனைவா் என்.சுலைமான், தமிழ்த்துறை தலைவா் முனைவா் ம.ராஜா, பேராசிரியா்கள் லீனாமேரி, அனிதா, சந்தான லெட்சுமி, விஜயபாரதி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.