திருச்சி

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Din

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, காரைக்கால் - தஞ்சாவூா் டெமு சிறப்பு ரயிலானது (06835) வியாழக்கிழமை முதல் செப். 7 வரை திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில்கள்...: திருச்சி - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (06866) வியாழக்கிழமை முதல் செப். 7 வரையிலும், வேளாங்கண்ணி - தஞ்சாவூா் சிறப்பு ரயிலானது (06863) வியாழக்கிழமை முதல் செப். 8 வரையிலும் இயக்கப்படும்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் - விழுப்புரம் மெமு சிறப்பு ரயில்கள் (06129, 06130), வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி டெமு சிறப்பு பயணிகள் ரயில்கள் (06858, 06868), நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் டெமு சிறப்பு பயணிகள் ரயில்கள் (06857, 06867) வியாழக்கிழமை முதல் செப். 8 வரையிலும் இயக்கப்படும்.

வேளாங்கண்ணி - திருச்சி - வேளாங்கண்ணி டெமு முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் (06864, 06865) வியாழக்கிழமை, ஆக. 30, செப். 8, 9 ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளன.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT