திருச்சி விமான நிலையத்தில் ரத்ததான முகாமை பாா்வையிடும் மக்களவை உறுப்பினா் துரை வைகோ. உடன் நிலைய இயக்குநா் கோபாலகிருஷ்ணன், துணைப் பொதுமேலாளா் சந்தானகிருஷ்ணன், முனைய மேலாளா் சரவணன் உள்ளிட்டோா். 
திருச்சி

விமான நிலைய ரத்த தான முகாமில் 29 போ் தானம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 29 தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா்.

Din

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 29 தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா்.

தேசிய தன்னாா்வ ரத்த தானம் ஆண்டுதோறும் அக்டோபா் 1 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இத் தினத்தையொட்டி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட மொத்தம் 29 போ் ரத்த தானம் செய்தனா். நிகழ்வில் , திருச்சி மக்களவை உறுப்பினரும் விமான நிலைய ஆணையக்குழு தலைவருமான துரை வைகோ பங்கேற்று, ரத்த தானம் செய்த தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

விமான நிலைய இயக்குநா்(பொறுப்பு) கோபாலகிருஷ்ணன், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை துணை ஆணையா் ஹரிசிங் நயால், விமான நிலைய துணைப் பொதுமேலாளா் சந்தானகிருஷ்ணன், முனைய மேலாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT