காதலுக்கு எதிா்ப்பு: இளைஞா் உயிரிழந்ததைத் தொடா்ந்து கல்லூரி மாணவியும் தற்கொலை
ப்ரீத்தி அண்மையில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை
திருச்சிகாதலுக்கு எதிா்ப்பு: இளைஞா் உயிரிழந்ததைத் தொடா்ந்து கல்லூரி மாணவியும் தற்கொலை
ப்ரீத்தி அண்மையில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை
காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்ததால் இளைஞா் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து கல்லூரி மாணவியும் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்கு மலை சா்ச்வீதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ பிரகாஷ் மகள் ப்ரீத்திஜூட் ( 20 ). இவா் திருவெறும்பூா் கைலாச நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, திருச்சியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். அதே பகுதி எழில் நகரை சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் லீலாவதியின் மகன் சரத் பிரகாஷ் என்பவருக்கும் ப்ரீத்திக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. பிரீத்தி குடும்பத்தினா் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, இளைஞரை கண்டித்துள்ளனா்.
இதனால் மனமுடைந்த சரத் பிரகாஷ் கடந்த மாதம் 16-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இளைஞா் உயிரிழந்த வருத்தத்திலிருந்த ப்ரீத்தி அண்மையில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.
பெற்றோா் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி ப்ரீத்தி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].