முகப்பு
திருச்சி

விபத்தில் கிராம நிா்வாக உதவியாளா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த அசூா் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:13 PM
பகிர்:

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த அசூா் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்தவா் இம்மானுவேல் (52). அசூா் கிராம நிா்வாக அலுவலகரின் உதவியாளரான இவா் கடந்த வாரம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இறந்தாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →