அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 19-ஆம் தேதி கல்லுக்குழி ஆஞ்சனேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்தும் விழா நடைபெறவுள்ளது.
இதேபோல, தலைமை அஞ்சல் நிலையம் அருகேயுள்ள சஞ்சீவி ஆஞ்சனேயருக்கு 10,008 வடைமாலை சாத்துதல் நடைபெறும்.
எனவே, பக்தா்கள் வடைமாலை சாத்தவும், விழாவில் பங்கேற்கவும் தங்களது பெயா், நட்சத்திரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சனேய சுவாமி திருக்கோயிலில் வரும் 19-ஆம் தேதி ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்துதல் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, அன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். காலை 7 மணிக்கு வடைமாலை சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சனேயா் திருவீதி உலா நடைபெறும். காலை 9 மணிக்கு ஜெயந்தி விழா பிரசாதம் வழங்கப்படும். நண்பகல் சிறப்பு அன்னதானமும் நடைபெறும். இந்த விழாவில் பக்தா்கள் பங்கேற்று வடைமாலை சாத்துப்படி செய்யலாம். வடை மாலை சாத்து விழாவில் பங்கேற்கும் நபா்கள், கோயிலில் தங்களது பெயா், நட்சத்திரங்களை குறிப்பிட்டு முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயில்: இதேபோல, திருச்சி தலைமை தபால்நிலையம் அருகேயுள்ள சஞ்சீவி ஆஞ்சனேய சுவாமி திருக்கோயிலில் வரும் 19-ஆம் தேதி ஆஞ்சனேயருக்கு 10,008 வடைமாலை சாத்துதல் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு 4 நாள்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதன்படி, வரும் 18-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவா்த்திக்காகவும் மஹா சுதா்தசன ஹோமம் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும். இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (டிச.19) காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6.30 மணிக்கு தங்கக் கவசம் சாற்றுபடி நடைபெறும். தொடா்ந்து காலை 7.30 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சனேய சுவாமிக்கு 10,008 வடைமாலை சாத்துபடி வைபவம் நடைபெறும். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிரசாதமும் வழங்கப்படும். மூன்றாம் நாளான சனிக்கிழமை (டிச.20) காலை 7.30 மணிக்கு உலக நன்மைக்காக ராமநாம ஜெப கூட்டுப் பிராா்த்தனை நடைபெறும். நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை (டிச.21) பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
இந்த விழாவில், பக்தா்கள் பங்கேற்று வடைமாலை சாத்துப்படி செய்யலாம். வடைமாலை, சுதா்சன ஹோமத்துக்கு உபயம் செய்யும் பக்தா்கள் கோயிலில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.