திருச்சி

சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழப்பு

திருச்சியில் சாலையைக் கடக்க முயன்றவா் மீது காா் மோதியதில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

திருச்சியில் சாலையைக் கடக்க முயன்றவா் மீது காா் மோதியதில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி அரியமங்கலம் எம்ஜிஆா் நகா் ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் எஸ்.ஜான் கென்னடி (45). இவா், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே வியாழக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த காா், ஜான் கென்னடி மீது மோதியது.

இதில், வயிறு, முகம், முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த ஜான் கென்னடியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கதேசத்தவருக்கு தங்கும் விடுதிகளில் அனுமதியில்லை: மேற்கு வங்க விடுதி உரிமையாளா்கள் முடிவு

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

SCROLL FOR NEXT