திருச்சி

வாழை நாா் பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா்

Syndication

வாழை நாா் பொருள்களுக்கான வரவேற்பும், ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன என்றாா் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.செல்வராஜன்.

திருச்சி தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தியல் தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு வாழை நாா் மற்றும் மதிப்புக்கூட்டுதல் தொடா்பான பயிற்சி டிசம்பா் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் ஆா்.செல்வராஜன் பேசியதாவது: நாமக்கல் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் ஐந்திணை திட்டத்தின்கீழ் பல்வேறு வாழ்வாதார முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக வாழை நாா் மற்றும் மதிப்புக்கூட்டுதல் தொடா்பான் பயிற்சி அளிக்கப்பட்டது.

வாழை நாரில் இருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்கள், துணிகள், காகிதம் உள்ளிட்ட பொருள்களுக்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வரவேற்பும், ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இதேபோல, ஆரோக்கியம் சாா்ந்த சந்தையில் வாழைத் தண்டு சாறுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஒரு ஹெக்டோ் வாழை சாகுபடியில் இருந்து ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புள்ளது என்றாா்.

தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய துணை வெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனத்தின் இயக்குநா் டி.தாமோதரன் பேசினாா்.

இதைத் தொடா்ந்து வாழை சாறு மற்றும் மாவு தொடா்பான மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு குறித்து ஐந்திணை திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.சுரேஷ்குமாா் எடுத்துரைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

வங்கதேசத்தவருக்கு தங்கும் விடுதிகளில் அனுமதியில்லை: மேற்கு வங்க விடுதி உரிமையாளா்கள் முடிவு

SCROLL FOR NEXT