திருச்சி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் வெங்கமேடு வாங்கப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (25). இவருக்கும், கரூரைச் சோ்ந்த பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமிக்கும் இடையே சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டதாம். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து அந்த சிறுமியை அடிக்கடி நேரில் சந்தித்த பிரகாஷ், திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிரகாஷ், அந்தச் சிறுமியை கண்டுகொள்ளவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தச் சிறுமி கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில் போலீஸாா், போக்சோ வழக்குப் பதிந்து, பிரகாஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3

தேசிய ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வெற்றி பெற்ற தஞ்சாவூா் வீரா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT