திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்த வெளிநாட்டு சிகரெட்டுகள் 
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7.82 லட்சம் மதிப்பிலான 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Din

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7.82 லட்சம் மதிப்பிலான 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில், ஒரு பயணி உரிய அனுமதியின்றி, வெளிநாட்டில் தயாரான சிகெரெட்டுகளை கொண்டு வந்திருந்தது தெரியவந்தது. அதில் 250 பெட்டிகளில் தலா 10 மற்றும் 20 சிகரெட்டுகள் வீதம் 50,000 இஎஸ்எஸ்இ கோல்டு என்ற ரக சிகரெட்டுகளும், ஒயிட் ஸ்லிம்ஸ் ரக சிகரெட்டுகள் 1600 என மொத்தம் 51,600 சிகரெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.7.82 லட்சமாகும்.

அவற்றை கைப்பற்றிய சுங்கத் துறையினா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்!

திருக்குறள் சொல்லும் வாழ்க்கைப் பாடங்களை விளக்கிய முதல்வர் Stalin

மலேசியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தல்: இந்திய இளைஞர் இலங்கையில் கைது!

கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

உற்சாக வரவேற்பு! நடனமாடிய Trump!

SCROLL FOR NEXT