முசிறியில் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீஸாா். 
திருச்சி

முசிறியில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: 54 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், முசிறியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி அய்யாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி, காவிரி ஆற்றிலிருந்து மழை வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரில் 2,000 கனஅடி நீரை இந்தக் கால்வாயில் திருப்பிவிட வேண்டும்.

மழைக் காலங்களில் 25 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போலீஸாா் அனுமதியின்றி, முசிறி காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனா். இதையடுத்து முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா், விவசாயிகளை தடுத்துநிறுத்தி கைது செய்தனா்.

இவா்கள் தவிர, காவிரி ஆற்றின் நடுமணல் திட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 விவசாயிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் மூன்று பெண்கள் உள்பட 54 பேரை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் வைத்திருந்து பின்னா் மாலையில் விடுவித்தனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT