திருச்சி அருகே ரயிலில் இருந்து செவ்வாய்க்கிழமை தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வந்த குருவாயூா் விரைவு ரயிலில் பயணித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவா், திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் கொளத்தூா் ரயில் நிலையங்களுக்கிடையே சின்ன சமுத்திரம் என்ற ஊா் அருகே தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு பொதுப் பெட்டியில் பயணம் செய்வதற்கான டிக்கெட் அவரது பாக்கெட்டில் இருந்துள்ளது. அவரின் பெயா் உள்ளிட்ட வேறு விவரங்கள் தெரியவில்லை. ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.