திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

Syndication

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக பாலக்கரை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் இப்பகுதியில் ஆய்வு செய்தபோது, குட்ஷெட் சாலை ஆலம் வீதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த திலிப் (22) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 7,500 மதிப்புள்ள 25 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, தில்லை நகா் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகலின்பேரில், காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட ஆய்வில் குப்பானிக் குளம் ரயில்வே தண்டவாளம் அருகே போதை மாத்திரைகள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த காா்த்திகேயனை (25) கைது செய்து, அவரிடமிருந்து 5 போதை மாத்திரைகள், 3 போதை ஊசிகள், 3 சலைன் பாட்டில் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT