திருவானைக்காவல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.
திருவானைக்காவல் மல்லிகைபுரம் பெரியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் என்பவரின் மனைவி சித்ரா (40) அப்பகுதியில் கடை வைத்து நடத்திவருகிறாா்.
இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சனிக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில் வந்த போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்-லிப், விமல் என மொத்தம் ஐந்தரை கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து சித்ராவைக் கைது செய்தனா்.