அரசுப் பள்ளிகள் தத்தெடுப்புக்கு கல்வித்துறை நடவடிக்கை
வேலூர், ஆக.1: "பள்ளி வளர்ச்சித் திட்டம்' மூலம் அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் மே
வேலூர், ஆக.1: "பள்ளி வளர்ச்சித் திட்டம்' மூலம் அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் மேம்பாடு அடையும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் போன்றவற்றை மேம்படுத்த தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகிறது.
Advertisement
தொடர்ந்து நிதி ஒதுக்குற்குப் பதிலாக, இதில் தனியாரின் பங்களிப்பை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. "இதற்கென பள்ளி வளர்ச்சித் திட்டம்'(நஸ்ரீட்ர்ர்ப் ஐம்ல்ழ்ர்ஸ்ங்ம்ங்ய்ற் நஸ்ரீட்ங்ம்ங்) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத் திட்டத்தில் தொழில் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்விப் புரவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
இவர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்து (அக்ர்ல்ற்ண்ர்ய்) அப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்யலாம்.
பள்ளிகளுக்கு கூடுதல் இடம் வழங்குவதுடன் வகுப்பறைகள், விளையாட்டுத் திடல், ஆய்வகம், நூலககக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம். மேலும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு உபகரணங்கள், ஆய்வு சார்ந்த நூல்கள், இதர தளவாடங்கள் வழங்குவது, கற்பித்தல் முறையில் புதுமையை புகுத்துவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம்.
இப் பணிகளைச் செய்துகொடுப்போர், அவர்களது பெயர் அல்லது அவர்கள் விரும்பும் பெயரை கல்வெட்டுகளில் பொறித்துக் கொள்ளலாம்.
பள்ளியைத் தத்தெடுக்க விரும்புவோர் தொடக்கப் பள்ளிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம், நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் நன்கொடை அளிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் ஆகியோரோடு இணைந்து, பள்ளிக்குத் தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும்.
இத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் நன்கொடையாளர்களோடு 5 ஆண்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். இதை மேலும் 2 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இத் திட்டத்தில் பங்கேற்போர் பள்ளி நிர்வாகத்தில் குறுக்கிடமாட்டார்கள் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நலன் மேம்படும்: பல அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவது, சேர்க்கை பாதிக்கப்படுவது, அடிப்படை வசதிகள் இல்லாதது எனப் பல பிரச்னைகள் நிலவி வருகின்றன. இந் நிலையில், இத் திட்டம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த துணை புரியும் என்று பள்ளிக் கல்வித்துறை எதிர்பார்க்கிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்றும் எண்ணுகிறது.
நல்ல வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் இத் திட்டத்தில் தனிக்கவனம் செலுத்தும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தரமான கல்வியை உறுதிப்படுத்த இத் திட்டத்தில் அவசியமான முடிவுகளை எடுக்கும்போது, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் என்பதையும் கல்வித்துறை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.