திருப்பத்தூரில் ஏஆர்டி மையம் அமைக்கப்படுமா?
வேலூர், ஆக. 3: வேலூர் மாவட்டத்தில், எச்ஐவி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கூட்டு மருந்து சிகிச்சை (ஏஆர்டி) மையத்தை திருப்பத்தூரிலும் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழகத்தில் எ
வேலூர், ஆக. 3: வேலூர் மாவட்டத்தில், எச்ஐவி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கூட்டு மருந்து சிகிச்சை (ஏஆர்டி) மையத்தை திருப்பத்தூரிலும் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழகத்தில் எச்ஐவி, எய்ட்ஸôல் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்று. இதுவரை 5,37,959 பேருக்கு பரிசோதனை செய்ததில், 10,842 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. பெண்களில் 2,85,785 பேர் பரிசோதனை செய்ததில், 839 கர்ப்பிணிகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
வேலூர் அரசு மருத்துவமனைக்கு அடுத்து அதிகமானோர் பரிசோதனைக்கு வந்து செல்லும் இடம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை.
Advertisement
இங்கு இயங்கும் தன்னார்வ பரிசோதனை மையத்தில் கடந்த 6 மாதங்களில் பரிசோதனை செய்து கொண்டவர்கள் 21,792 பேர். இவர்களில், 635 பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது 3 சதவீதமாகும்.
இவர்களில் 2 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 36 பேர், கர்ப்பிணிகள் 46 பேர், திருநங்கைகள் 5 பேர்.
மாவட்ட அளவில், எச்ஐவி பாதிக்கப்பட்டோரில் 6,962 பேர் மட்டுமே எச்ஐவி நோய்க்கு எதிரான கூட்டு மருந்து சிகிச்சை (ஏஆர்டி) பெறுவதற்காகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இது 60 சதவீதமாகும். மற்றவர்கள் இதுவரை பதிவு செய்யவில்லை.
இவ்வாறு பதிவு செய்தோரிலும் கூட, சிடி4 எனும் ரத்த அணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்போரில் 2,938 பேர் மட்டுமே கூட்டு மருந்து சிகிச்சை உட்கொள்கின்றனர். இந்த சிகிச்சையால் மட்டுமே ரத்த அணுக்களின் எண்ணிக்கையை சற்று அதிகப்படுத்தி, பிற நோய்கள் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கேனும் மீள முடியும்.
ஆனால், எச்ஐவி தாக்கிய அனைவருக்கும் இந்த கூட்டு மருந்து சிகிச்சை கிடைப்பதில் சிரமம் நீடிக்கிறது. திருப்பத்தூர் தனி சுகாதார மாவட்டமாக இருந்தாலும், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர், கூட்டு மருந்து சிகிச்சைக்காக வேலூர் வர வேண்டியிருக்கிறது.
ஜோலார்பேட்டையில் ஏஆர்டி இணை மையம் அமைக்கப்பட்டிருந்தாலும், வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஓராண்டுக்கு தொடர்ந்து வந்தால் மட்டுமே அவர்கள் ஜோலார்பேட்டைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
எனவே ஜோலார்பேட்டையில் உள்ள இணை மையத்தை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றி, தனி ஏஆர்டி மையம் அமைக்க வேண்டும் என்று எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.