முகப்பு
வேலூர்

ஆக்கிரமிப்புகளால் திணறும் திருப்பத்தூர் பேருந்து நிலையம்

வேலூர், ஆக. 5: திருப்பத்தூர் பேருந்து நிலையம் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி  வழிகிறது. இதனால், பேருந்துகள் நிறுத்த இடமின்றி, நெரிசல் மிகுந்து காணப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறத

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:33 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:29 PM

வேலூர், ஆக. 5: திருப்பத்தூர் பேருந்து நிலையம் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி  வழிகிறது. இதனால், பேருந்துகள் நிறுத்த இடமின்றி, நெரிசல் மிகுந்து காணப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது.

 திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, சென்னை செல்லும் பேருந்துகள், வேலூரிலிருந்து சேலம், தருமபுரி செல்லும் பேருந்துகள் என தினசரி 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன.

 ஆனால், வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி இல்லாமல், மிகக் குறுகலாக அமைந்திருப்பதால், நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு போதுமான இடவசதி இங்கு கிடையாது.

Advertisement

 பேருந்து நிலைய நுழைவுவாயில், பொதுமக்கள் நடக்கும் பாதைகளில்  ஏராளமான தரைக்கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் பேருந்துகள் நிறுத்துமிடங்களின் வழியே செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதியிலும்  ஏராளமானோர் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், பேருந்துகளை, பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியிலேயே பெரும்பாலும் நிறுத்தும் சூழல் உள்ளது.

 வாகன நிறுத்துமிடத்துக்கு என தனி கட்டடம் கட்டப்பட்டும், அதை ஏலம் எடுத்தவர்கள், கட்டடத்துக்கு வெளியே தனியாகப் பந்தல் அமைத்து, கூடுதலாக வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

 தரைக்கடை ஆக்கிரமிப்புகள், பேருந்து நிலையத்துக்குள் அனுமதிக்கப்படும் இருசக்கர வாகனங்கள், பேருந்து நிலையத்துக்கு உள்ளேயே செயல்படும் வாகன நிறுத்துமிடம் என சந்தைக்கடை போல இப்பகுதி காணப்படுகிறது.

  பேருந்து நிலையத்துக்குள்ளேயே இரு டாஸ்மாக் மதுக்கடைகளும் இயங்குகின்றன. இங்கு வரும் "குடிமகன்கள்', பேருந்துகளுக்கு குறுக்கே இருசக்கர வாகனத்தில் செல்வதும், நடுவழியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு தகராறு செய்வதும் அன்றாட நிகழ்வாகிறது.

 இதுதவிர, பேருந்து நிலையத்துக்குள் சுற்றிவரும் ஏராளமான தள்ளுவண்டிகளாலும் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எவ்விதக் கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ இல்லாமல், பயணிகளைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது திருப்பத்தூர் பேருந்து நிலையம்.

 நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அலுவலர்களும், காவல்துறையும்  மெüனம் சாதிப்பது ஏனோ?.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.