முகப்பு
வேலூர்

தழுதாழைக்கு தார்ச்சாலை போடப்படுமா?

வந்தவாசி, செப்.8: வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட தழுதாழை கிராமத்தில் ஜல்லிசாலை போட்டு ஒரு ஆண்டாகியும் தார்ச்சாலை போடாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.   வந்தவாசி-விளாங்காடு சாலையில் வந

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:26 PM
பகிர்:

வந்தவாசி, செப்.8: வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட தழுதாழை கிராமத்தில் ஜல்லிசாலை போட்டு ஒரு ஆண்டாகியும் தார்ச்சாலை போடாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  வந்தவாசி-விளாங்காடு சாலையில் வந்தவாசியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது தழுதாழை கூட்டுச்சாலை. இந்த கூட்டுச்சாலையிலிருந்து தழுதாழை வழியாக நடுப்பட்டு கிராமத்துக்கு 1.5 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இந்த சாலையை தழுதாழை, நடுப்பட்டு, காரம், கொசப்பட்டு, ஒழப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

  இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து புதிய தார்ச்சாலை போட பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் | 29.74 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 2009 ஜூன் மாதம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக ஜல்லிசாலை போடப்பட்டது. பின்னர் பணி நிறுத்தப்பட்டது. ஒரு ஆண்டு ஆகியும் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

  சில நாள்களுக்கு முன் இச்சாலையை ஆய்வு செய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் தார்ச்சாலை போட ஏன் தாமதம் ஆகிறது? என்று வந்தவாசி ஒன்றிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் தார்ச்சாலை போடும் பணி தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

  மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை போடவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →