முகப்பு
வேலூர்

ஆதரவற்ற குழந்தைகள் பங்கேற்ற மனிதநேய மகிழ்ச்சிப் பொங்கல்

வேலூர், ஜன. 8: நண்பர்கள் நம்பிக்கை அமைப்பின் சார்பில் மனிதநேய மகிழ்ச்சிப் பொங்கல் திருவிழா காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.   சத்துவாச்சாரி நம்பிக்கை இல்ல குழந்தைகள், அண்ணாநகர் பார்வையற்றோர் பள்ளிக

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

வேலூர், ஜன. 8: நண்பர்கள் நம்பிக்கை அமைப்பின் சார்பில் மனிதநேய மகிழ்ச்சிப் பொங்கல் திருவிழா காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

  சத்துவாச்சாரி நம்பிக்கை இல்ல குழந்தைகள், அண்ணாநகர் பார்வையற்றோர் பள்ளிக் குழந்தைகள், சத்துவாச்சாரி காதுகேளாதோர் பள்ளிக் குழந்தைகள், வேலப்பாடி செக்மா இல்ல குழந்தைகள் உள்ளிட்ட 320-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, உடல் ஊனமுற்ற குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் தமிழ்க் கலாசார முறைப்படி செங்கரும்புடன் பொங்கலிடப்பட்டது. பின்னர் கலை நிகழ்ச்சி, ரத்ததான முகாம் நடைபெற்றது.

 ஆட்சியர் செ. ராஜேந்திரன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு புத்தகப் பை, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

 விழாவில் அஹ்ல சுன்னத்வால் ஜமாத் தலைவர் எச். இப்ராஹிம்கான், தி ஹோப் ஹவுஸ் இயக்குநர் ரூபி நாக்கா, உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் ரா. சந்திரசேகரன், நண்பர்கள் நம்பிக்கை அமைப்பின் தலைவர் தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து

கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →