அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அம்மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை தவிர்த்து மேல்சிகிச்சைக்கு வேலூர் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கும் நிலை உள்ளது. அதனால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை நிபுனர்களை நியமித்து, மருத்துவமனையின் சிகிச்சையை விரிவுபடுத்த வேண்டும். ஆம்பூரில் உள்ள உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா, சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதை நகராட்சி நிர்வாகம் திடீர் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். சேதமடைந்துள்ள உமர்சாலையை புதிதாக அமைக்கும்பொழுது தரம்மிக்க சாலையாக அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement