வேலூரில் 111 டிகிரி
தமிழகத்தின் 11 நகரங்களிலும், புதுச்சேரியிலும் சனிக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்தது.
தமிழகத்தின் 11 நகரங்களிலும், புதுச்சேரியிலும் சனிக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்தது.
இந்த ஆண்டு கோடையில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது.
சென்னை, கடலூர், தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது.
Advertisement
Advertisement
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வங்கதேசம்-மியான்மரை நோக்கி புயர் நகர்வதால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் தமிழக வான் பகுதியில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும். இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்.
இதனால் வரும் நாள்களில் தமிழகத்தில் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அடுத்த இரு நாள்களுக்கு வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அனல் காற்றுடன் கூடிய வெயில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):
வேலூர் - 111
திருச்சி - 109
திருப்பத்தூர் - 107
சென்னை மீனம்பாக்கம்
- 106
தருமபுரி, நாகப்பட்டினம்,
புதுச்சேரி - 104
சென்னை நுங்கம்பாக்கம்,
கரூர் பரமத்தி, மதுரை,
பாளையங்கோட்டை,
சேலம் - 103
கடலூர் - 102
கோவை - 97
தூத்துக்குடி - 96
கன்னியாகுமரி - 92
குன்னூர் - 78
கொடைக்கானல் - 73