முகப்பு
வேலூர்

வேலூா் திருப்பதி தேவஸ்தான கோயிலில் சிறப்பு வழிபாடு

குபேரனிடம் கடன் வாங்கியதை நினைவு கூரும் விதமாக வேலூரிலுள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில், ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை, 2024 at 8:58 PM
பகிர்:

வேலூா்: குபேரனிடம் கடன் வாங்கியதை நினைவு கூரும் விதமாக வேலூரிலுள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில், ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்ட போது, தயாரின் தந்தை பெரிய அளவில் தங்கக் காசுகளை கேட்டாா். அதற்காக வெங்கடேச பெருமாள் குபேரனை சந்தித்து அவரிடமிருந்து 1.4 லட்சம் ராம முத்திரை கொண்ட பொற்காசுகளை கடனாகப் பெற்று, அதனை ஒரு யுகத்துக்கு வட்டியும் முதலுமாக அளிப்பதாகக் கூறி, அந்த பொற்காசுகளைக் கொண்டு ஸ்ரீவெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயாரை திருமணம் செய்ததாக புராணம் கூறுகிறது.

இந்தக் கடனை ஆண்டுதோறும் வெங்கடேச பெருமாள் குபேரனுக்கு திருப்பி செலுத்துவதை நினைவு கூரும் விதமாக வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் வெங்கடேச பெருமாளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்த சாமிதரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →