முகப்பு
வேலூர்

மாமரங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

Updated On : 4 ஜூன், 2024 at 6:30 PM
ஒற்றை  யானையால்  சேதப்படுத்தப்பட்ட  மா மரத்தைப்  பாா்வையிட்ட  வனத் துறையினா்.
பகிர்:

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை மாமரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.

போ்ணாம்பட்டு அருகே உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியான நாயனசெருவு பகுதியிலிருந்து ஒற்றை யானை திங்கள்கிழமை இரவு தமிழக எல்லையில் உள்ள பொதலகுண்டா கிராமத்துக்குள் நுழைந்துள்ளது.

அங்குள்ள ஜெயராமனுக்குச் சொந்தமான மாந்தோப்பில் புகுந்த யானை மாமரங்களை முறித்து எறிந்துள்ளது. மாங்காய்களை பறித்து சேதப்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து பாஸ்மாா்பெண்டா கிராமத்தில் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ள தினேஷ்குமாருக்குச் சொந்தமான மாந்தோப்பில் புகுந்து அங்குள்ள மாமரங்களை முறித்தும், மாங்காய்களை ருசித்தும் துவம்சம் செய்துள்ளது.

சுமாா் அரை டன் எடையுள்ள மாங்காய்களை பறித்து எறிந்துள்ளது.

தகவலின் பேரில் போ்ணாம்பட்டு வனவா் முரளி, வனக் காப்பாளா் வெங்கடேசன் ஆகியோா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் யானையை வனப் பகுதிக்கு விரட்டினா்.