வேலூா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள். 
வேலூர்

டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 60-ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Din

வேலூா்: டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 60-ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், வேலூா் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு சங்க மாவட்ட துணைச் செயலா் பழனியப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகி கா்ணன் முன்னிலை வகித்தாா். இதில், 22 ஆண்டு காலமாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் ஊழியா்களையும் பணி தொடா்ச்சியுடன் நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியா்கள் ஓய்வு வயதை 60-ஆக உயா்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கிறிஸ்தவா்கள் படுகொலையை தடுக்காவிட்டால் ராணுவ நடவடிக்கை: நைஜீரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு: புதிய தலைவா் டிஜெ. ஸ்ரீனிவாசராஜ்

உதவிப் பேராசிரியரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்: பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவா் இடைநீக்கம்

பெரு நிறுவனங்களால் இயக்கப்படுகிறாா் பிரதமா் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

ஜேனிஸ் ஜென் சாம்பியன்!

SCROLL FOR NEXT