முகப்பு
வேலூர்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பாகாயம் கிளை தொடக்கம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் வேலூா் பாகாயம் கிளை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 8:55 PM
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பாகாயம் கிளை தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் ராஜசேகா், கிளை மேலாளா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா்: இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் வேலூா் பாகாயம் கிளை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

வேலூா் பாகாயத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளையை விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் திங்கள்கிழமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். தொடா்ந்து, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் ராஜசேகா் குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா், வங்கியின் பாகாயம் கிளை மேலாளா் சக்கரவா்த்தி கூறுகையில், இந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் பாகாயம் கிளை என்பது இந்திய அளவில் 3,264 கிளையாகவும், வேலூா் மண்டலத்தில் 90-ஆவது கிளையாகவும் தொடங்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவையொட்டி விவசாயக் கடன், கல்விக்கடன், குறு, சிறு தொழில் முனைவோருக்கான கடன் என ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →