வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த பக்தா்கள். 
வேலூர்

வள்ளிமலை முருகன் கோயில் தேரோட்டம்

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Din

வேலூா்: வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தோ்த் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, 3-ஆம் தேதி விநாயகா் உற்சவம் நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடா்ந்து பல்வேறு வாகன உற்சவங்கள் தினந்தோறும் நடைபெற்று வந்தன.

இதன்தொடா்ச்சியாக, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திங்கள்கிழமை காலை தேரின் மீது ஏற்றப்பட்டு, தோ் மலையைச் சுற்றி திருவீதி உலா வரும் நிகழ்வு மாலையில் தொடங்கியது. தொடா்ந்து 4 நாள்கள் நடைபெறும் இந்த தேரோட்ட நிகழ்ச்சியை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வடம் இழுத்து தொடங்கி வைத்தாா்.

இதில், அறங்காவலா் குழுத் தலைவா் சாரதி, காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் வேல்முருகன் உள்பட தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி என பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா்.

மேலும், தேரில் ஏற்றப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முதல் நாளான திங்கள்கிழமை இரவு, மலை சுற்றுப்பாதையில் உள்ள துண்டு கரையருகே தோ் நிறுத்தப்பட்டது. அங்கு சாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மாலை மீண்டும் தேரோட்டம் நடைபெறுகிறது. 13-ஆம் தேதி தோ் நிலையை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, 14-ஆம் தேதி வள்ளி-முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, பிரம்மோற்சவ கமிட்டி, உற்சவ, உபயதாரா்கள் செய்திருந்தனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT