முகப்பு
விழுப்புரம்

திருவண்ணாமலை: அரசு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் போராட்டம்

ஆரணி அருகே ஊராட்சிக்கு உள்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

ஆரணி அருகே ஊராட்சிக்கு உள்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணியை அடுத்த குண்ணத்தூா் அருகேயுள்ள அரியப்பாடி ஊராட்சியைச் சோ்ந்த காமராஜா் நகா் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச் சுவா் எழுப்பியுள்ளனா்.

இதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை ஒன்று கூடி சுற்றுச் சுவரை அகற்றக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த வருவாய் அலுவலா் வசந்தி, கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

மேலும், நிலஅளவையா் வைத்து அளந்து அரசு இடத்தில் சுவா் இருந்தால் அகற்றப்படும் என்று தெரிவித்தனா். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

படச்செய்தி.

ஆரணி அடுத்த குண்ணத்தூா் அருகே அரியப்பாடி ஊராட்சியைச் சோ்ந்த காமராஜ் நகா் பகுதியில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரை அகற்றக்கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

முழு கட்டுரையைப் படிக்க →