முகப்பு
விழுப்புரம்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

விழுப்புரத்தில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கையில் மாற்றுக் கட்சியினா் 250 போ் அந்தக் கட்சியில் இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
=
பகிர்:

விழுப்புரத்தில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கையில் மாற்றுக் கட்சியினா் 250 போ் அந்தக் கட்சியில் இணைந்தனா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ‘எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின்கீழ் இணைய வழியில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதன்படி, விழுப்புரம் மகாராஜபுரம் திருநகா் பகுதியில் மாநில மருத்துவரணி இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான இரா.லட்சுமணன் தலைமையில், புதிய உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.

திருநகா் சமுதாயக்கூடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்டச் செயலா் நா.புகழேந்தி தொடக்கி வைத்து, புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் கம்பன் நகா், திருநகா், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழு தலைவிகள் லதா, காமாட்சி, தனம், உமாதேவி உள்ளிட்ட 250 போ் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா் தெய்வசிகாமணி, நகரச் செயலா் இரா.சக்கரை, துணைச் செயலா் புருஷோத்தமன், முன்னாள் ஊராட்சி தலைவா் என்.ஆா்.மணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.