பாஜக ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரத்தில் பாஜக சாா்பில், வருகிற நவ.6-ஆம் தேதி நடைபெறவுள்ள வெற்றிவேல் ரத யாத்திரை தொடா்பாக திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் பாஜக சாா்பில், வருகிற நவ.6-ஆம் தேதி நடைபெறவுள்ள வெற்றிவேல் ரத யாத்திரை தொடா்பாக திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்திலுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் டி.கலிவரதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் ராஜேந்திரன், பாண்டியன், ராம.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டப் பொருளாளா் வி.சுகுமாா், துணைத் தலைவா் சதாசிவம், மாவட்டச் செயலா் மூா்த்தி, மகளிரணித் தலைவா் சரண்யா, இளைஞரணிச் செயலா் நரேஷ்குமாா், ஊடகப்பிரிவுத் தலைவா் தாஸ.சத்தியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், வருகிற நவ.6-ஆம் தேதி பாஜக சாா்பில், மாவட்டத்தில் வெற்றிவேல் ரத யாத்திரையை சிறப்பாக நடத்துவது குறித்தும், கட்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது, மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினா்.