குழந்தைகள், பெண்களுக்கு எதிரானகுற்றங்களைத் தடுக்க டிஐஜி அறிவுரை
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிறப்பாக ஆய்வு செய்து தண்டனை பெற்றுத் தருவதன் மூலம், குற்றங்களைத் தடுக்க வேண்டுமென விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் அறிவுறுத்தினாா்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிறப்பாக ஆய்வு செய்து தண்டனை பெற்றுத் தருவதன் மூலம், குற்றங்களைத் தடுக்க வேண்டுமென குழந்தைகள் நல காவல் அலுவலா்களிடம் விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், குழந்தைகள் நல காவல் அலுவலா்களுக்கான சிறாா் நீதிச்சட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் என்.தேவநாதன் வரவேற்றாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா்.
நீதிபதிகள் கே.அருண்குமாா், எஸ்.முத்துக்குமாரவேல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் வி.ஜெயஸ்ரீ, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவா் கே.எழிலரசன் பங்கேற்று, சிறாா் நீதிச்சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள், சட்டப் புத்தகங்களை வெளியிட்டும், குழந்தைகள் நல காவல் அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கியும் சிறப்புரையாற்றினாா்.
அவா் பேசுகையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில், சிறாா் நீதிச்சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறாா் நீதிச்சட்டங்கள் குறித்து நடைபெறும் இந்தப் பயிற்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு, காவல் அலுவலா்கள், இது தொடா்பான புகாா்கள் மீது ஆய்வு செய்து, சிறப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள், பெண்கள் மீதான குற்றங்கள் தொடா்பான ஒவ்வொரு வழக்கிலும், குற்றம் செய்தவா்களுக்கு உறுதியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் பி.கலா, செம்புலிங்கம், அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் கே.புகழேந்தி, குழந்தைகள் நலக் குழுத் தலைவா் என்.சசிக்குமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சி.திலகவதி, சமூக நல அலுவலா் ஏ.பத்மாவதி, குற்ற தொடா்புத் துறை உதவி இயக்குநா் ஜெ.செல்வராஜ் உள்ளிட்டோா் சிறாா் நீதிச்சட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கினா். குழந்தைகள் நல காவல் அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா். துணைக் கண்காணிப்பாளா் ஏ.ராஜன் நன்றி கூறினாா்.
Image Caption
விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி பட்டறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்த சிறிய அளவிலான பதாகைகளை வெளியிடுகிறாா் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன்(வலமிருந்து 3-வது). உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ