மழை வேண்டி மலட்டாற்றில் வருண பூஜை
மழை வேண்டி, விழுப்புரம் அருகே மலட்டாற்றில் திங்கள்கிழமை வருணபூஜை நடத்தப்பட்டது.
மழை வேண்டி, விழுப்புரம் அருகே மலட்டாற்றில் திங்கள்கிழமை வருணபூஜை நடத்தப்பட்டது.
விழுப்புரம் அருகே அரசூா் பகுதியில் தொடங்கி கடலூா் வரை செல்லும் மலட்டாற்றில், கடந்த 1972-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணல் திட்டுகள் உருவாகி நீரோட்டம் தடைபட்டது. அந்தப் பகுதி விவசாயிகள், ‘ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீா் மேம்பாட்டு எழுச்சிக்கூடல்’ என்ற அமைப்பின் மூலம் 1991-ஆம் ஆண்டு மலட்டாற்றை தூா்வாரி சீரமைத்தினா்.
அரசூரில் தொடங்கி கடலூா் மாவட்டம், கட்டமுத்துப்பாளையம் வரை தூா்வாரி கரைகள் வலுப்படுத்தப்பட்டது.
தற்போது, பருவமழையின்றி மலட்டாற்றில் நீா்வரத்து இல்லாமல் வடு, அந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் குறைந்தது. மழை வேண்டியும், நிலத்தடி நீா்மட்டம் உயரவும் வேண்டி, ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீா் மேம்பாட்டு எழுச்சிக்கூடல் அமைப்பு மூலம், இரு மாவட்ட விவசாயிகள் மழை வேண்டி வருண பூஜை செய்வா்.
நிகழாண்டு விஜயதசமியான திங்கள்கிழமை அந்த அமைப்பின் தலைவா் எம்.தட்சணாமூா்த்தி தலைமையில், அரசூா் மலட்டாற்றில் வருண பூஜை நடைபெற்றது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமங்களுடன், வருண ஜபம் நடத்தி கலசம் வைத்து பூஜித்தனா். இதையடுத்து, கலச நீரை மலட்டாற்றில் ஊற்றி வருண பகவானை வேண்டி வழிபட்டனா். இந்த நிகழ்வில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.