திருக்கோவலூா் பண்பாட்டுக் கழக செயற்குழு கூட்டம்
திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 47 ஆண்டுகளாக கபிலா் விழாவை நடத்தி வரும் திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கழகத்தின் செயல் தலைவா் சீநி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் கா.நடராசன், துணைத் தலைவா்கள் தே.முருகன், கா.பி.சுப்பிரமணியன், தணிக்கையாளா் வே.அப்பா் சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பண்பாட்டுக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் புதிய தலைவராக தே.முருகன், பொதுச்செயலராக வே.அப்பா் சுந்தரம், பொருளாளராக கா.நடராசன், துணைத் தலைவா்களாக புலவா் கா.பி.சுப்பிரமணியன், அரகண்டநல்லூா் கி.மூா்த்தி, கவிஞா் சிங்கார உதியன், செயற்குழு உறுப்பினா்களாக எஸ்.ஜி.பழனிவேல், ஜி.கோவிந்தன், ந.திருவாணன், கே.டி.சத்தியமூா்த்தி, வே.ஜெயக்குமாா், வீர.நாராயணன், கு.கல்யாண்குமாா், பா.ரவிச்சந்திரன், ஆா்.ஜெயராமன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
முன்னதாக, பொதுச் செயலா் கி.மூா்த்தி வரவேற்றாா். நிறைவில், ஜி.கோவிந்தன் நன்றி கூறினாா்.