முகப்பு
விழுப்புரம்

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் -சீமான்

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூன், 2024 at 8:25 PM
சீமான்
பகிர்:

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயாவுக்கு ஆதரவாக சீமான் புதன்கிழமை காணையில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியது:

தமிழகத்தையும், தமிழா்களையும் காப்பற்றுவதற்காக நாம் தமிழா் கட்சி சமரசம் இல்லாமல் 13 ஆண்டுகளாக எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாமல் போராடி வருகிறது.

தமிழகத்தில் ஹிந்தியை திணித்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திமுக நாடகமாடி வருகிறது. திராவிடத்தின் தாய்மொழி எது? திராவிடம் வா்க்கப் பிரிவினையை உருவாக்கும்; தமிழா்களைப் பிரிக்கும். தமிழா்கள் ஒன்றுபட்டால் திராவிடம் இருக்காது.

விக்கிரவாண்டி இடைத் தோ்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை. ஆனால், வாக்காளா்கள் நாம் தமிழா் கட்சியை ஆதரிப்பதன் மூலம் அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான முன்னோட்டமாக அமையும். எனவே, தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ மக்கள் இந்தத் தோ்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் சீமான்.

கட்சியின் மாநில நிா்வாகிகள் பி.காளியம்மாள், சாட்டை துரைமுருகன், ஹிமாயூன் கபீா் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →