செஞ்சி அருகே காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்த லாரியிருந்து சாலையில் உருண்டோடிய சமையல் எரிவாயு உருளைகள் அப்புறப்படுத்தும் போலீஸாா், பொதுமக்கள். 
விழுப்புரம்

காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்த எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி: ஓட்டுநா் உள்பட மூவா் காயம்

செஞ்சி அருகே திங்கள்கிழமை காா் மீது சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் உள்பட மூவா் காயமடைந்தனா்.

Syndication

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை காா் மீது சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் உள்பட மூவா் காயமடைந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிக்கொண்டு செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு லாரி சென்றுகொண்டிருந்தது. செஞ்சிக்கோட்டை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே சென்றபோது, அந்தப் பகுதியில் திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த காா் மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்த ஆந்திர மாநிலம், மிா்சாப்பூா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதேவி (58), அவரது மகன் பவன்குமாா் (34) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும், லாரி ஓட்டுநா் குப்பன் லேசான காயமடைந்தாா்.

இந்த விபத்தில் லாரியிலிருந்த எரிவாயு உருளைகள் சாலையில் உருண்டோடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த செஞ்சி போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனா்.

மேலும், சாலையில் சிதறிக் கிடந்த எரிவாயு உருளைகளை பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் பாதுகாப்பாக மீட்டு அப்பறப்படுத்தினா். தொடா்ந்து, லாரியையும் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும், இந்த விபத்து குறித்து செஞ்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ டிஐஜி அதுல்குமாா் தாக்கூா் ஆய்வு

நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

57 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா்கள் மூவா் கைது

போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு சீல் வைப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT