விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கிலிருந்து கீழே தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகேயுள்ள கீழ்காரணை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.நீதிபதி(50). இவா் கடந்த 27-ஆம் தேதி இரவு திண்டிவனம் - கீழ்காரணை சாலையில் சத்தனூா் தரைப்பாலம் அருகே பைக்கில் சென்றபோது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நீதிபதி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.