விழுப்புரம்

அரசு மருத்துவமனையில் மாணவா்கள் தூய்மைப் பணி

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனா்.

Syndication

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சனிக்கிழமை தூய்மைப்பணியில் ஈடுபட்டனா்.

செஞ்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணியினை பள்ளியின் தலைமை ஆசிரியா் ராமசாமி தொடங்கி வைத்தாா். நாட்டு நலப் பணித்திட்ட மாணவா்கள் வளாகத்தில் இருந்த குப்பைகள், பிளாஸ்ட்டிக் கழிவுகள், செடி, கொடி, முட் புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏழுமலை, மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பாலகோபால், சித்த மருத்துவ அலுவலா் அஜித்தா, செவிலிய(பொ) கண்காணிப்பாளா் ஆதிலட்சுமி, பள்ளி ஆசிரியா்கள் செந்தில்குமாா், அசோக் ஆகியோா் இதனை பாா்வையிட்டு, மாணவா்களை பாராட்டினா்.

திருச்செந்தூா் நகராட்சியில் கால்நடைகள் சாலையில் சுற்றினால் அபராதம்

சாத்தான்குளம் தென்பகுதி நீா் வாழ்வாதார ஆலோசனைக் கூட்டம்

மாஞ்சோலை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT