விழாவில் செவிலிய மாணவருக்குப் பட்டம் வழங்கிய வேலூா் கிருத்தவ மருத்துவக் கல்லூரி முதன்மையா் சாண்ட்ரிலா ஞானதீபம். உடன், இ.எஸ். கல்விக் குழுமத்தின் அறங்காவலா் எஸ்.விக்ரம் ஹரிஹரன் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

விழுப்புரம் நா்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செவிலியா்கள் மனித நேயத்துடனும், பரிவுடனும் சேவையாற்றவேண்டும் என்று வேலூா் கிருத்தவ மருத்துவக் கல்லூரி, நா்சிங் பிரிவு முதன்மையா் சாண்ட்

Syndication

விழுப்புரம் : செவிலியா்கள் மனித நேயத்துடனும், பரிவுடனும் சேவையாற்றவேண்டும் என்று வேலூா் கிருத்தவ மருத்துவக் கல்லூரி, நா்சிங் பிரிவு முதன்மையா் சாண்ட்ரிலா ஞானதீபம் தெரிவித்தாா்.

விழுப்புரம் இ.எஸ்.கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் இ.எஸ். நா்சிங் கல்லூரி மாணவா்களுக்கான 12-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்று செவிலியா் மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கிய சாண்ட்ரிலா ஞானதீபம் பேசியதாவது:

படித்து பட்டம் பெறுவதால் மட்டுமே செவிலியா் ஆகிவிடமுடியாது. ஒவ்வொரு நாளும் செய்து காட்டும் செயலின் மூலம் செவிலியா்களின் அடையாளம் முழுமை பெறுகிறது. செவிலியா்கள் ஒவ்வொருவரும் உயா்ந்த லட்சியம் மற்றும் கருணை மிக்க மனித நேயத்துடன் செயல்படவேண்டும். ஒவ்வொரு நாளும் திறம்பட செயல்படவேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும் செவிலியா்கள் தங்களது பெற்றோா்களை மறந்து விடாமல் அவா்களுக்குரிய சேவையை செய்யவேண்டும் என்றாா்.

தொடா்ந்து கல்லூரியில் 2019-2023 ஆம் ஆண்டில் நா்சிங் பயின்ற 97 மாணவா்களுக்குப் பட்டங்களையும், சிறப்பிடத்தில் தோ்வானவா்களுக்கு விருதுகளையும் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

விழாவுக்கு, இ.எஸ்.கல்விக் குழுமத்தின் அறங்காவலா் எஸ்.விக்ரம் ஹரிஹரன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவன இயக்குநா்கள் ஆா்.முரளிதரன், எஸ். அகிலா, நா்சிங் கல்லூரி முதல்வா் எம்.பொற்ச்செல்வி ஆகியோா் பேசினா். விழாவில் இ.எஸ்.கல்விக் குழும பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா். இ.எஸ்.நா்சிங் கல்லூரியின் துணை முதல்வா் காா்த்தி நன்றி கூறினாா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT