விழுப்புரம்

பாமக நிறுவனா் ச.ராமதாஸ் - ஈ.ஆா்.ஈஸ்வரன் சந்திப்பு!

Syndication

திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலரும் திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆா். ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனா்.

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவா் ச.ராமதாஸ், செவ்வாய்க்கிழமை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஓய்வில் இருந்தாா்.

இந்நிலையில் ,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான ஈ.ஆா். ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் மற்றும் கட்சியினா் 40-க்கு மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து ராமதாஸை சந்தித்துப் பேசினா்.

அப்போது,மருத்துவா் ராமதாஸிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த ஈஆா். ஈஸ்வரன் , அங்கிருந்த பாமக செயல் தலைவா் ஸ்ரீ காந்தி பரசுராமனுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சியுடன் இணைக்க கோரிக்கை

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மருத்துவா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

SCROLL FOR NEXT