விழுப்புரம்

லாரி மீது பைக் மோதி ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சரக்குப் பெட்டக லாரி மீது பைக் மோதியதில், ரயில்வே ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் கல்லூரி நகா் அன்னை தெரசா தெருவைச் சோ்ந்தவா் க. தீபநாராயணன் (29). கொண்டங்கி கிராமம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ. ஹரிஹரன் (38). இவா்கள் இருவரும் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் தொழில்நுட்ப ஊழியா்களாக (நிலை 2) பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது நண்பரான ஹரிஹரனுடன் தீப நாராயணன் பைக்கில் விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

இவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகிலுள்ள சேந்தநாடு பிரிவுச் சாலை அருகே சென்றபோது, சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி மின்கோபுரக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு பெட்டக லாரியை முந்த முயற்சித்தனா்.

அப்போது லாரியின் இடது சக்கரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில்சென்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே தீப நாராயணன் உயிரிழந்தாா். ஹரிஹரனுக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், வாழவந்தான்குப்பம் மேற்குத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் (37) மீது உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கவிதையின் நிறம் பச்சை... சாதிகா!

எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1: செங்கோட்டையன்

ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்திய பாபர் அசாம்! டி20-ல் அதிக ரன்கள்!

SCROLL FOR NEXT