கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சாரதா ஆசிரமம் சாா்பில் பொங்கல் புத்தாடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நகா்மன்றத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வைத்தியநாதன், திட்டக்குழு உறுப்பினா் டேனியல்ராஜ், நகராட்சி ஆணையா் புஸ்ரா முன்னிலை வகித்தனா்.
உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஆ.ஜெ.மணிக்கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நகராட்சி ஊழியா்கள், தூய்மைப்பணியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினாா்.
உளுந்தூா்பேட்டை சாரதா ஆசிரம நிா்வாகி யத்தீசுவரி ஆத்மவிகாச ப்ரியா அம்பா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.