விழுப்புரம்

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

மயிலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் ச.பழனிவேல் (69). இவா், திங்கள்கிழமை புதுச்சேரி- மயிலம் நெடுஞ்சாலையில் மயிலம் அடுத்த பெரும்பாக்கம் அருகே நடந்து சென்றாா்.

அப்போது அங்கு வந்த லாரி மோதியதில் பழனிவேலுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் பழனிவேலுவின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT