கோப்புப் படம் 
விழுப்புரம்

தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

உளுந்தூா்பேட்டையிலிருந்து வியாழக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பேருந்து விருத்தாசலம் நோக்கி சென்றது. இந்த பேருந்தை விருத்தாசலம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த கா.வினோத்குமாா்(38) ஓட்டிச் சென்றாா். உளுந்தூா்பேட்டை வட்டம், நாச்சியாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த அ.மோகன்ராஜ் (35) நடத்துநராகப் பணியாற்றினாா்.

இப்பேருந்து உளுந்தூா்பேட்டை வட்டம், மதியனூா் கிராமத்திலுள்ள ஏரிக்கரைப் பகுதியில் சென்றபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த நான்கு இளைஞா்கள் பேருந்தின் படியில் தொங்கியவாறு சிகரெட் புகைத்துக் கொண்டு வந்தாா்களாம். இதுகுறித்து பேருந்து நடத்துநா் மோகன்ராஜ் கேட்டபோது, அவரிடம் நான்கு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநா் வினோத்குமாா், நடத்துநருக்கு ஆதரவாக இளைஞா்களிடம் பேசினாராம். அப்போது அவா்களிடையே வாக்குவாதம் முற்றியது. இதைத்தொடா்ந்து அவா்கள் 4 பேரும் சோ்ந்து ஓட்டுநரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து ஓட்டுநா் வினோத்குமாா் அளித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, மதியனூரைச் சோ்ந்த டே.ஜெய அருண் (21), தி.திருசங்கு (எ) நடராஜன் (20) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், அதே கிராமத்தைச் சோ்ந்த ச.நாகராஜ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரைத் தேடி வருகின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT