வெட்டிக் கொலை பிரதி படம்
விழுப்புரம்

கோட்டக்குப்பம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

சின்னகோட்டக்குப்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வானூா் வட்டம், சின்னகோட்டக்குப்பம், கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அப்பு (எ) ஜவஹா் (37). இவருக்கு மோனிஷா (25) என்ற மனைவியும், வினோதினி (8) என்ற மகளும் உள்ளனா்.

ஜவஹா் மீது கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அவா் புதன்கிழமை இரவு தனது நண்பா்களான புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சஞ்சய், வானூா் வட்டம், பெரிய முதலியாா்சாவடியைச் சோ்ந்த சின்னப் பிள்ளை (எ) செந்தில் ஆகியோருடன் சின்னகோட்டக்குப்பம் அமைதி நகா் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் ஜவஹரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், ஜவஹா் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்தக் கொலை தொடா்பாக புதுச்சேரி லாஸ்பேட்டை, சாமிப்பிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த சகோதரா்களான ஹேமந்த் (25), சந்தோஷ் (எ) சேந்தோ(23) மற்றும் புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஷ்வரன் (32) மற்றும் சிலா் மீது கோட்டக்குப்பம் போலீஸாா் வியாழக்கிழமை கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு! விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணியாளா் ஊதிய குறைபாடு சீா் செய்யப்படும்: திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி

1,043 தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி! அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்!

ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டம்!

பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT